பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கிட ஆட்டோ தொழிலாளர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி: ஏ.ஐ.டி.யூ.சி., ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாநில மாநாடு புதுச்சேரியில் நடந்தது.
மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாநில கவுரவ தலைவர் அபிேஷகம் மாநாட்டு கொடியினை ஏற்றினார். ஏ.ஐ.டி.யூ.சி., மாநில தலைவர் தினேஷ் பொன்னையா மாநாட்டினை துவக்கி வைத்தார்.மாநில பொதுச் செயலாளர் அந்தோணி, இந்திய கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார், மாநில துணை தலைவர் மோதிலால், மாநில செயலாளர் மூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநில பொது செயலாளர் சந்திரசேகரன் அரசியல் அமைப்பு நிலை, வேலை அறிக்கை வாசித்தார். மாநாட்டில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில கவுரவ தலைவராக சந்திரசேகரன், மாநிலத் தலைவராக சேகர், மாநில பொது செயலாளராக அந்தோணி, மாநில பொருளாளராக பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநிலத் துணைத் தலைவர்களாக கோபாலகிருஷ்ணன், வேலு, கோபி, மாநில செயலாளர்களாக ஜான், சதீஷ்குமார், விக்ரம், நிர்வாக குழு உறுப்பினர்களாக அய்யப்பன், முருகன், பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டடனர்.
மாநாட்டில், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ரேபிடோ வாடகை இரு சக்கர வாகனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். செயலி மூலம் ஆட்டோக்கள் இயங்கிடவும், பெட்ரோல், டீசல் மானியம் வழங்கிட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.