இன்டெக் கண்காட்சியில்... 'மேட் இன் இந்தியா' இயந்திரங்கள் தொழில்துறையினரை ஈர்க்கும் கண்காட்சி இன்று நிறைவு

கோவை: கொடிசியா வளாகத்தில் 'இன்டெக்' தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான், தைவான் போன்ற வெளிநாடுகளை சேர்ந்த இயந்திரங்களுடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் தொழில்நுட்ப இயந்திரங்களும் கவனம் ஈர்த்து வருகின்றன.

700க்கு மேற்பட்ட அரங்குகளுடன் பிரமாண்டமாக நடந்து வரும் கண்காட்சியை, தினமும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு பயனடைந்து வருகின்றனர்.

கிரேன் தயாரிப்பில் பிரமாண்டம் சென்னையைச் சேர்ந்த K2 கிரேன்ஸ் நிர்வாக இயக்குநர் உதயகுமார் கூறுகையில், பேக்டரிக்கு தேவையான கிரேன்களை உற்பத்தி செய்கிறோம். அனைத்து மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு விற்பனை செய்கிறோம்.

ஆட்டோமொபைல், உள்கட்டமைப்பு, ஏரோஸ்பேஸ், காற்றாலை, மருந்து, ரசாயனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எங்கள் கிரேன்களை பயன்படுத்துகிறார்கள்.

ஆண்டுக்கு சராசரியாக 650 முதல் 700 கிரேன் உற்பத்தி செய்கிறோம். இந்தியாவில் முதல்முறையாக கப்பல்களில் பயன்படுத்தும் ஹேட்ச் கவர் கிரேனை அறிமுகப்படுத்தவுள்ளோம், என்றார்.

ஹைட்ராலிக் பிரேக்கிங்கில் சி.என்.சி. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த எக்ஸகட் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் நாகராஜா கூறுகையில், ராடுகளை அறுப்பதற்கான சி.என்.சி. இயந்திரங்களை தயாரிக்கிறோம். பொதுவாக சி.என்.சி. இயந்திரங்களில் எலக்ட்ரிகல் பிரேக் இருக்கும். இந்தியாவிலேயே முதல்முறையாக நாங்கள் ஹைட்ராலிக் பிரேக்கிங்கில் சி.என்.சி. இயந்திரங்களை தயாரித்துள்ளோம்.

25 டயா மீட்டர் ராடில் சராசரி சி.என்.சி. இயந்திரங்கள் 4 லட்சம் சதுர செ.மீ., ராடு கிடைக்கும். இந்த இயந்திரத்தில் 5 லட்சம் சதுர செ.மீ., ராடு கிடைக்கும்.

10 சதவீதம் அதிக உற்பத்தி கிடைக்கும். மற்ற சி.என்.சி. இயந்திரங்களுடன் ஒப்பிடுகையில் இதன் ஆயுட் காலமும் அதிகம். இதில் 5 வகையான இயந்திரங்கள் உள்ளன, என்றார்.

கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

@block_B@

முட்டை தரம் சோதிக்க கருவி

கோவையைச் சேர்ந்த நுயுனஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனர் செபாஸ்டியன் நுயுனஸ் கூறுகையில், எலக்ட்ரிக்கல், வேளாண்மை, மருத்துவம், ஆய்வகங்களுக்கு தேவையான 30க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கருவிகளை தயாரித்து வருகிறோம். கோழிப்பண்ணைகளில் முட்டையின் தரத்தை பரிசோதிக்க ஒரு கருவியை அறிமுகப்படுத்தியுள்ளோம். காணாமல் போன நகையை கண்டு பிடிக்க, ஒரு மெட்டல் டிடெக்டர் கருவியை கண்டு பிடித்துள்ளோம். ஒரே நேரத்தில் 1,000 கிலோ பூண்டு பதப்படுத்தும் கருவியை தயாரிக்கிறோம். இந்த கருவிகளை ஏற்றுமதியும் செய்கிறோம், என்றார்.block_B

Advertisement