கூலி தொழிலாளி துாக்கிட்டு உயிரிழப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, கூலி தொழிலாளி துாக்கிட்டு உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாது, 57. கூலி தொழிலாளி. இவரது மனைவி, 28 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில், இரண்டாவதாக சலையா, 43, என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு, காலில் அறுவை சிகிச்சை செய்து, தொடர் சிகிச்சை பெற்று வந்த சாது, சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 6:00 மணியளவில், தன் வீட்டின் அருகே உள்ள கடையின் முன்புறம் உள்ள கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, சலையா கொடுத்த புகாரின்படி, புல்லரம் பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
இன்டெக் கண்காட்சியில்... 'மேட் இன் இந்தியா' இயந்திரங்கள் தொழில்துறையினரை ஈர்க்கும் கண்காட்சி இன்று நிறைவு
-
ஆபாச பேச்சு: இருவர் கைது
-
பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
-
மரக்கன்றுகளை நட்ட பா.ஜ.,வினர்
-
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று துவக்கம்
-
பெட்ரோல், டீசலுக்கு மானியம் வழங்கிட ஆட்டோ தொழிலாளர் சங்கம் கோரிக்கை