நாங்களும் வருவோம்... * கால்பந்து 'ரவுண்ட்-அப்'
உலக கோப்பை கால்பந்து அரங்கில் 4 முறை உலக சாம்பியன் ஆன இத்தாலி (1934, 1938, 1982, 2006), இம்முறை ஐரோப்பா பிரிவில் நடந்த முக்கிய தகுதிச்சுற்று போட்டியில் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 1-4 என போஸ்னியாவிடம் தோற்றது. இதனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக (2018, 2022, 2026) உலக கோப்பை கால்பந்தில் பங்கேற்க முடியாமல் போனது.
எனினும் உலக கோப்பை கால்பந்து அனுபவத்தை நேரில் பெற, அமெரிக்கா வந்துள்ளார் 'இத்தாலி-அமெரிக்கா' மாடல் கிளாடியா ரொமானி. சமூக வலைதள பிரபலமாகவும் திகழும் இவர், கால்பந்து அனுபவம் குறித்த போட்டோக்களை 'போஸ்ட்' செய்து வருகிறார்.
இதில் அவர் கூறுகையில், ''இத்தாலி அணி கடைசியாக உலக கோப்பை வென்ற போது, ஜெர்மனியில் இருந்தேன். இம்முறை இத்தாலி பங்கேற்கவில்லை என்றாலும், வித்தியாசமான சூழலாக உள்ளது,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும் சிறப்பு பேட்டி
Advertisement
Advertisement