ரசிகர்களை கவர்ந்த பிங்க் ஷூ

நியூயார்க்: உலக கோப்பை கால்பந்து தொடரில் நிறைய வீரர்கள் 'பிங்க்' நிற 'ஷூ' அணிந்து விளையாடுகின்றனர். போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அமெரிக்காவின் வினிசியஸ் ஜூனியர், பிரான்சின் எம்பாப்வே, இங்கிலாந்தின் ஹாரி கேன் உள்ளிட்டோர் 'பிங்க் ஷூ' அணிந்திருந்தனர்.
இதுகுறித்து 'ஷூ' தயாரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பச்சை நிற புல்வெளி ஆடுகளத்தில், 'பிங்க்' நிறம் தனியாக தெரியும். இத்தொடரில் பங்கேற்கும் எந்த ஒரு அணியும் 'பிங்க்' நிற 'ஜெர்சி' அணிவதில்லை. எனவே 'பிங்க் ஷூ' ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கின்றன. இந்த நிறம், வீரர்களுக்கு துணிச்சல், தன்னம்பிக்கை அளிக்கும்,'' என்றார்.

Advertisement