இருமுறை உலக சாம்பியனான உருகுவே அணியை அலறவிட்ட கேப் வெர்டே! உலகக்கோப்பையில் த்ரில் டிரா
மயாமி: உலகக்கோப்பை கால்பந்து போட்டி லீக் ஆட்டத்தில், உருகுவே அணியும், கேப் வெர்டே அணியும் மோதிய போட்டியில், உருகுவே எளிதாக வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் த்ரில் டிராவில் முடிந்தது.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்காவில் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மயாமியில் நடந்த 'குரூப்-எச்' லீக் போட்டியில், பலம் வாய்ந்த உருகுவே அணியும், ஆப்பிரிக்காவின் கருப்பு குதிரையான கேப் வெர்டே அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய 21-வது நிமிடத்திலேயே மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கேப் வெர்டே அணியின் கெவின் பினா, சுமார் 34 யார்டு தூரத்திலிருந்து அடித்த மின்னல் வேக ப்ரீ-கிக் கோலாக மாற, கேப் வெர்டே 1-0 என முன்னிலை பெற்று உலகக்கோப்பை வரலாற்றில் தங்களது முதல் கோலை பதிவு செய்தது.
உருகுவே பதிலடி:
இதன்பின் உருகுவே வீரர்கள் ஆக்ரோஷமாக பதில் தாக்குதல் நடத்தினர். இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. ஆட்டத்தின் 44வது நிமிடத்தில், உருகுவே அணியின் மேக்ஸி அராயுகோ, மிக நேர்த்தியாக ஒரு ஹெட்டர் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (45+6-வது நிமிடம்), உருகுவேயின் அகஸ்டின் கனோபியோ, மற்றொரு சூப்பர் கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் உருகுவே 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் எப்படியும் உருகுவே கோல் மழையை பொழியும் என்று நினைத்தபோது, கேப் வெர்டே வீரர்கள் தங்களது அசாத்திய தடுப்பாட்டத்தால் முட்டுக்கட்டை போட்டனர். தொடர்ந்து போராடிய கேப் வெர்டே அணிக்கு, 61-வது நிமிடத்தில் ஹெலியோ வரேலா கோல் அடிக்க, ஆட்டம் 2-2 என சமநிலைக்கு வந்தது.
த்ரில் டிரா:
இதன் பின் ஆட்டம் மீண்டும் சூடு பிடித்தது. இறுதி நிமிடங்கள் வரை உருகுவே அணி கோல் அடிக்க எவ்வளவோ போராடியும், கேப் வெர்டே அரணை உடைக்க முடியவில்லை. இறுதிவரை விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
முன்னணி அணியான ஸ்பெயினைத் தொடர்ந்து, தற்போது இருமுறை உலக சாம்பியனான உருகுவே அணியையும் டிரா செய்ய வைத்து, கேப் வெர்டே அணி உலகக்கோப்பையில் தங்களது மாஸ் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
@block_G@
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 'குரூப் - ஜி' பிரிவு லீக் ஆட்டத்தில், பெல்ஜியம் - ஈரான் அணிகள் மோதின, இதில் ஆட்ட நேர முடிவு வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால், இப்போட்டி டிராவில் (0-0) முடிந்தது.block_G
கிரிக்கெட்டில் நியூசிலாந்து போல் கால்பந்தில் இவர்கள் கருப்புக் குதிரைகளாக உருவெடுக்கிறார்கள். அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் நன்றாக இருக்கும்மேலும் செய்திகள்
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
ஸ்பெயின் அணி கலக்கல் வெற்றி; சவுதி அரேபியாவை 4-0 என வீழ்த்தியது
-
உலக கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை வீழ்த்தி ஜெர்மனி அபாரம்
-
ஹைத்தி வெளியேற்றம்; 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி
-
ஆஸ்திரேலியாவை அலற விட்ட அமெரிக்கா; நாக் அவுட் சுற்றுக்கு அசத்தலாக தகுதி
-
உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ அபாரம்