ஸ்பெயின் அணி கலக்கல் வெற்றி; சவுதி அரேபியாவை 4-0 என வீழ்த்தியது
அட்லாண்டா: அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடருக்கான 'எச்' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின், சவுதி அரேபியா அணிகள் மோதின. இப்போட்டியில் ஸ்பெயின் அணி 4-0 என, சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில், 18 வயதான ஸ்பெயினின் லமைன் யமால் ஒரு கோல் அடித்தார். இது, உலக கோப்பை வரலாற்றில் இவரது முதல் கோல் ஆனது. தொடர்ந்து அசத்திய ஸ்பெயின் அணிக்கு 21, 24வது நிமிடத்தில் ஓயார்சாபால், 2 கோல் அடித்து கைகொடுத்தார். முதல் பாதி முடிவில் ஸ்பெயின் அணி 3-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 49வது நிமிடத்தில் சவுதி அரேபியாவின் ஹசன் அல்-தம்பக்தி 'சேம்சைடு' கோல் அடித்து ஏமாற்றினார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+2வது நிமிடம்) ஸ்பெயினின் பெர்ணான்டோ டோரஸ் அடித்த கோல், 'வார்' தொழில்நுட்ப உதவியுடன் 'ஆப்சைடு' என மறுக்கப்பட்டது. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
மேலும் செய்திகள்
-
மெஸ்ஸி உலக சாதனை! ஆஸ்திரியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அதிரடி வெற்றி
-
உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
-
இருமுறை உலக சாம்பியனான உருகுவே அணியை அலறவிட்ட கேப் வெர்டே! உலகக்கோப்பையில் த்ரில் டிரா
-
உலக கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை வீழ்த்தி ஜெர்மனி அபாரம்
-
ஹைத்தி வெளியேற்றம்; 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி
-
ஆஸ்திரேலியாவை அலற விட்ட அமெரிக்கா; நாக் அவுட் சுற்றுக்கு அசத்தலாக தகுதி