உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது எகிப்து
நமது நிருபர்
உலக கோப்பை கால்பந்து தொடரில் நியூசிலாந்து அணியை எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உலக கால்பந்து தொடரின் வான்கூவர் மைதானத்தில் நடந்த இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் எகிப்து அணிகள் மோதின. 15வது நிமிடத்தில் நியூசிலாந்து அணி வீரர் பின் சுர்மான் ஒரு கோல் அடித்தார். இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.
இதைத்தொடர்ந்து 2வது பாதியில் எகிப்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 58வது நிமிடத்தில் எகிப்தின் வீரர் முஸ்தபா ஜிகோ ஒரு கோல் அடித்தார். இதனால், 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமன் அடைந்தது. தொடர்ந்து 67வது நிமிடத்தில் எகிப்து அணியின் வீரர் முகமது சலா இரண்டாவது கோலை அடித்தார். இதனால், 2-1 என்ற புள்ளி கணக்கில் எகிப்து முன்னிலை பெற்றது.
82வது நிமிடத்தில் எகிப்து அணியின் வீரர் டிரெஜ்குவெட் ஒரு கோல் அடித்தார். இதனால், எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைக்கு சென்றது. பிறகு ஆட்ட நேரம் இறுதிவரை நியூசிலாந்து அணி போராடியது. எந்த பலனும் கிடைக்கவில்லை. இறுதியில் எகிப்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.எகிப்து அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
கடைசி நேரத்தில் மேட்ச் ரொம்ப விறுவிறுப்பாக போனது.. எகிப்து கடைசி எட்டி பிடித்ததுமேலும் செய்திகள்
-
இருமுறை உலக சாம்பியனான உருகுவே அணியை அலறவிட்ட கேப் வெர்டே! உலகக்கோப்பையில் த்ரில் டிரா
-
ஸ்பெயின் அணி கலக்கல் வெற்றி; சவுதி அரேபியாவை 4-0 என வீழ்த்தியது
-
உலக கோப்பை கால்பந்து: ஐவரி கோஸ்டை வீழ்த்தி ஜெர்மனி அபாரம்
-
ஹைத்தி வெளியேற்றம்; 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி
-
ஆஸ்திரேலியாவை அலற விட்ட அமெரிக்கா; நாக் அவுட் சுற்றுக்கு அசத்தலாக தகுதி
-
உலகக் கோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ அபாரம்