குழந்தை இல்லாததால் விரக்தி பெண் துாக்கு போட்டு தற்கொலை

விழுப்புரம், ஜூன் 27– குழந்தை இல்லாத விரக்தியில் பெண் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த வேம்பியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி தீபா, 35; இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால், விரக்தியில் இருந்த தீபா, நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டுக் கொண்டார்.

உடன் அவரை, உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று அவர் இறந்தார்.

இதுகுறித்து, ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கஞ்சனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement