இயக்குனர் பாக்யராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி

47

சென்னை: பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இன்று (ஜூன் 27) காலை காலமானார். அவருக்கு வயது 73.

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பாக்யராஜ். இவர், 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு தான் சென்னை திரும்பி உள்ளார் பாக்யராஜ்.

இன்று காலையில் வழக்கம் போல் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூற உடனடியாக அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் உள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.


Tamil News

பயோ டேட்டா!




ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் 1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தவர் பாக்யராஜ். தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , இயக்குநர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர். ஆரம்பத்தில் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

1979ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவருக்கு மனைவி பூர்ணிமா, மகன், மகள் உள்ளனர். நலமாக இருந்த பாக்யராஜ் இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


முதல்வர் விஜய் இரங்கல்

இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், ''தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பாக்யராஜின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.

அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
Latest Tamil News

பாக்யராஜ் கண்கள் தானம்





பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலையில் வழக்கம் போல் வாக்கிங் சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே கூறியிருந்தார்.
அவர் மறைந்ததையடுத்து அவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் வந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு கண்களை தானமாக பெற்று சென்றனர்.




@block_Y@

தலைவர்கள் இரங்கல்

பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். block_Y




அரசு மரியாதை




இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். பாக்யராஜ் உடல் நாளை (ஜூன் 28) மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.




பெற்ற விருதுகள்




* 'முந்தானை முடிச்சு' (1983) திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது


* 'புதிய வார்ப்புகள்' (1979) திரைப்படத்திற்காக சிறந்த வசன எழுத்தாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது


* சீமா (SIIMA) வாழ்நாள் சாதனையாளர் விருது



மேலும் படிக்க...


திரையுலகில் அடுத்த அதிர்ச்சி; இயக்குநர் பாக்யராஜ் காலமானார். இது தொடர்பாக தினமலர் சினிமா பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.


படிக்க இங்கே கிளிக் செய்யவும்



வீடியோ பார்க்க...


நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மரணம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு


வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement