2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு

2


சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 25) ஆபரண தங்கம், கிராம் 13,140 ரூபாய்க்கும், சவரன் 1,05,120 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 230 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


நேற்றைய நிலவரம்




நேற்று (ஜூன் 26) காலை தங்கம் விலை கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 13,220 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,05,760 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 235 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு, 80 ரூபாய் உயர்ந்து, 13,300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சவரனுக்கு, 640 ரூபாய் அதிகரித்து, 1,06,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்து, 2.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு, 1,280 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு, 15,000 ரூபாய் அதிகரித்துள்ளன.


இன்றைய நிலவரம்




இந்நிலையில் இன்று (ஜூன் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் 1,840 ரூபாய் அதிகரித்துள்ளது.


வெள்ளி நிலவரம்




வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement