இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவது உறுதி
சென்னை: இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் உகந்ததாக இருக்கும் என்று முடிவு செய்து போட்டியிட இருக்கிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
சட்டசபை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க., தலைவரான முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவால் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து, ஆறு தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிடுவார் என தெரிகிறது. தற்போது இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது குறித்து சீமான் கூறியதாவது: இடைத்தேர்தலில் நான் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட கட்சியினர் விரும்புகின்றனர்.
பிற கட்சியினரின் விருப்பமும் இதுவாக இருக்கிறது. அம்பாசமுத்திரம் உகந்ததாக இருக்கும் என்று முடிவு செய்து போட்டியிட இருக்கிறேன். மற்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
திருவிளையாடல் படத்தில் சிவன் , நாம் தனித்தே இயங்குவோம் என்று சொல்லும்படியான காட்சி வரும். அதேபோல் நாம் தனித்தே இயங்குவோம் என்று அடித்தொண்டைலிருந்து வசனம் பேசிவிட்டு இப்போ என்ன பிற கட்சியினரின் விருப்பம். அப்படி விருப்பம் தெரிவிப்பதாக இருந்தால் எங்கிட்டாவது போய் சொல்லு அப்படினு எப்பவும்போல பேசவேண்டியதுதானே. இப்பவும் எந்த கட்சியின் ஆதரவும் எனக்கு தேவையில்லை என பேசு. இது 100 டு 101 . அவ்வளவே
பிற கட்சியினரின் விருப்பம்? சைமன் இடைத்தேர்தலில் போட்டி போட நாதக கட்சி உறுப்பினர்கள் வேண்டிக்கொள்வது என்பது ஓகே. அதென்ன பிற கட்சியினர்? இதுவரை அரசல் புரசலாக இருந்த சமாசாரம் இப்போ பப்ளிக்கா ஆயிடுச்சு. ஸ்டாலின் தானே அது? அதிலென்ன பூடகம்? எல்லா இடைத்தேர்தல்களிலும் ஆளும் கட்சி ஆளுங்க தானே ஜெயிப்பாங்க? சைமன் நின்னு என்னா ஆவப்போவுது. போன தேர்தல் பிரச்சாரம் கடைசி நாள் வரைக்கும் ஆக்டர் விஜய் யை நல்லா போட்டு வெளுத்து கட்டியதன் பலன் விஜய் யை தூக்கி முதல் மந்திரி நாற்காலியில் ஓங்கார வச்சிடுச்சி. ஆட்சியும் 45 நாட்களை கடந்து போய்கிட்டு இருக்கு. இன்னமும் சீனி வெடி வெடிச்சிகிட்டு இருக்க ஆசைப்படும் சைமனை சொந்த கட்சிகக்காரனுங்களே கூடிய சீக்கிரம் துரத்தப்போறானுங்க.
கல்யான வீட்டில் பழ்லை சீயும், தி.திராவிடமும் இலிக்கும் போதே, விஜய்யுக்கு எதிர் சதி செய்ரான்கனு தெரிந்து போச்சு. உல்குத்து வேலை ஆரம்பபிதிட்டான்கள். தி.சீமானை, ஒத்துதூதி, பதவி பகலவன் தி.திருமா நம்பி எமாந்து போகாதீங்க, விஜய் சார்...
இது என்ன மொழி?
விமர்சகர் என்ன சொன்னாலும், மீண்டும் மீண்டும் போராடுவதற்கான அசாதாரண மன உறுதி சீமானிடம் உள்ளது. அவர் வெற்றி பெறாமல் போகலாம், ஆனால் ஒருபோதும் மனம் தளர மாட்டார்.
கறந்த பால் மாடி புகாது . கருவாடு மீனாகாது . சீமான் எம் எல் ஏ ஆகமுடியாது. இந்த வசனம் சீமானின் மாமனார் சொன்னது. திராவிட குதிரை ஒரு மண் குதிரை . பயனில்லை ராஜா .
பாஜக நோட்டாவை தாண்டமுடியாது, அண்ணாமலை கட்சிக்கு டெப்பாசிட் தேறாது.
இடைத்தேர்தல்களில் எந்த இடத்திலும் நின்றாலும் 4சத வாக்குகள்தான் வாங்க போகிறாய், இதில் பில்டப் தேவையா
சில நாட்களுக்கு முன்னர் சீமான் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் ஸ்டாலின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போதே சீமான் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிந்துவிட்டது. ஸ்டாலினின் அரசியல் தேர்தலில் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கவே சீமானை தொடர்ந்து போட்டியிட வைப்பதே ஸ்டாலின் தான் என்று ஊர் உலகத்துக்கே தெரிந்த விஷயம்தானே..
இலங்கை போன்று இயற்கை விவசாயம் தான் செய்ய வேண்டும், அரசின் வரிகளை குறைக்க வேண்டும், அனைத்து அரசு சார்ந்த வசதிகளையும் இலவசமாக கொடுக்க வேண்டும், அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும், தனியார் கார்பொரேட் நிறுவனங்கள் எதுவுமே இருக்கக்கூடாது, அனைத்து நிறுவனங்களையும் அரசே நடத்தவேண்டும், அரசே விவசாயம் செய்ய வேண்டும்,
அரசே தொழில்கள் நடத்தி அரசே தொழிற்சாலைகளையும் நிர்வகிக்க வேண்டும், அரசு மானியங்கள் நிறைய கொடுக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட உண்டியல் குலுக்கிகளின் அதர பழசான காயலாங்கடை கொள்கைகளை கூவும் நாம் டுமிழர் கட்சியின் சிறப்பு என்னான்னா, 16 வயதில் ஒரு இளைஞன் செபாஸ்டியன் சைமனின் உணர்ச்சி பொங்கும் பேச்சை கேட்டுவிட்டு ரத்தம் கொதிக்க கையில் இருக்கும் நரம்பு புடைக்க நாம் தமிழரில் சேருவார். அந்த இளைஞனுக்கு 21 வயது ஆகும்போது உலக அரசியல், உலக பொருளாதாரம் இவற்றை படித்து தெரிந்துகொண்டு இந்தாளு பின்னாடியா ஐந்து வருடங்கள் இருந்தோம்னு தனக்கு தானே தலையில் அடித்துக்கொண்டு நாம் டுமிழரை விட்டு ஓடி விடுவான். அவ்வாறு ஓடி வரும் இளைஞன் 21 வயதில் இருந்து 25 வயது வரை சினிமா மோகத்தில் நம்மை காக்க வந்த ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் என்று நினைத்து அதில் சேருவார்.
அதாவது இன்றைய தலைமுறையினர் சிலர் தங்களின் பருவ வயதில் சீமானின் பின்னாடியும், வாலிபனான பின் ஜோசப்பின் பின்னாடியும் சென்று தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கூறுகெட்டு திரிவான் என கூற வருகிறீர்களா?
முஸ்லிம்களால் ஆபத்து, கோமியம் ஊட்டச்சத்து, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏத்துன்னு மண்டையைக் கழுவி தீக்குளிச்சி சாவலாம். வாங்க..
பிற கட்சியினரின் விருப்பம் என்பதுதான் இதில் சீமான் சொல்லியிருக்கும் புதிய மெசேஜ்.
சீமான் வெல்ல இயலாதுமேலும்
-
மதங்களை கடந்த மனிதநேயம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்
-
டாஸ்மாக் கடை அருகே வாட்டர் பாட்டில் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு
-
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
-
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
-
பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
-
மூணாறில் பருவ மழை குறைவால் குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு