போலீஸ் செய்திகள்

* ‘வாக்கிங்’ சென்ற ஏட்டு மரணம் உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே ஜோதிமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விருமாண்டி 47. தேனி மதுவிலக்கு ஏட்டு. நேற்று காலை கிராமத்தில் தோட்டத்து பகுதியில் ‘வாக்கிங்’ சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.  இவருக்கு மனைவி, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். 

* காய்கறி வியாபாரி பலி கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி அப்பாஸ் முகமது 23. காய்கறி வியாபாரி. நேற்று முன்தினம் இரவு கருங்காலக்குடியில் இருந்து காடாம்பட்டிக்கு டூவீலரில் சென்ற போது நிலைத் தடுமாறி விழுந்து இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

* மாணவர் பலி –––––––––––(படம் உண்டு) அவனியாபுரம்: பசுமலை விநாயக நகர் செல்வராஜ் மகன் தேவா 20. முத்துப்பட்டி செல்வராஜ் மகன் ரோஹித்,20. இருவரும் மூன்றாமாண்டு கல்லுாரி மாணவர்கள். சின்ன உடைப்பு அருகேயுள்ள கல்லுாரிக்கு டூவீலரில் சென்றனர். ரோஹித் ஓட்டினார். பெருங்குடி கணேசபுரம் அருகே ரோட்டின் ஓரமாக இருந்த வேகக் கட்டுப்பாட்டு தடுப்பு துாணில் டூவீலர் மோதியதில் இருவரும் காயமுற்றனர். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் தேவா இறந்தார். ரோஹித் சிகிச்சையில் உள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.



Advertisement