குறிச்சி கோயிலில் குண்டம் பாதுகாப்பாக நடத்த உத்தரவு

குறிச்சி: குறிச்சி, காந்திஜி சாலையில் குண்டத்து மாகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் குண்டம் விழா நடக்கும். கடந்தாண்டு சில இடையூறுகள் ஏற்பட்டன.

இம்முறை இடையூறு தவிர்க்க பாதுகாப்பு கோரி, கோவில் நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

விசாரித்த கோர்ட், விழா நடக்கும் வரும் ஜூலை 21 முதல் ஆக., 6 வரை போலீஸ் பாதுகாப்பு அளிக்கவேண்டும். பிற மதம் சார்ந்த பிளக்ஸ் பேனர்கள் வைப்பது, கலை நிகழ்ச்சிகளில் ஆபாசம் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement