வீட்டுமனை பட்டா கோரி கல்லுக்குட்டை மக்கள் மனு
பெருங்குடி: பெருங்குடி மண்டலம், 184வது வார்டுக்கு உட்பட்ட கல்லுக்குட்டை பகுதியில், ஜே.ஜே.நகர், அம்பேத்கர் புரட்சி நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட நகர்களில், 15,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதி மக்கள், 35 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வருவதால், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, சோழிங்கநல்லுார் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், கல்லுக்குட்டை குடியிருப்போர் நலச்சங்கத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
இந்த நிலம் அரசு தொழில்நுட்ப கல்வித் துறைக்கு சொந்தமானது என்பதால், இதுவரை வருவாய் துறை சார்பில் வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கப்படவில்லை. இதனால் சாலை, பள்ளி, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால்வாய் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, தற்காலிகமாக மின்சாரம் மற்றும் குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின்படி, பட்டா வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக, சோழிங்நல்லுார் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
எனவே, கல்லுக்குட்டை பகுதியில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் நிலத்தை வரன்முறைப்படுத்தி, உடனே இலவச வீட்டுமனை பட்டா வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
திரையுலகின் பன்முக வித்தகர், ‛திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜ் ஒரு பார்வை!
-
சொல்கிறார்கள் -––––––––––––– ‘நிறைய சம்பாதித்தால் நமக்கே நம் மீது மரியாதை வரும்!’
-
சொல்கிறார்கள் ––––––––––––––––– ‘குடும்ப வன்முறையா? நாங்கள் உதவ தயார்!’ ––––––––––––––––
-
2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு
-
இயக்குனர் பாக்யராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
-
இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவது உறுதி