சிலிண்டர், ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேரை சுற்றிவளைத்த போலீஸ்
சேலம்: சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இடைப்பாடி அருகே ரங்கம்
பாளையத்தில் உள்ள பேக்கரியில் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது வணிக சிலிண்டருக்கு பதில், வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்தி, பேக்கரி பொருட்கள் தயாரிப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, 4 சிலிண்டர்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான, தங்காயூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி பூங்கொடி, 54, என்பவரை கைது செய்தனர்.முன்னதாக நேற்று முன்தினம், இரும்பாலை அருகே கொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டியில், ஆனந்தன், 39, என்பவரது வீடு அருகே, 50 கிலோ அளவில், 4 மூட்டைகளில் இருந்த, 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பதுக்கி வைத்ததாக ஆனந்தன் வாக்குமூலம் கொடுத்தார். அவரை, போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரையுலகின் பன்முக வித்தகர், ‛திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜ் ஒரு பார்வை!
-
சொல்கிறார்கள் -––––––––––––– ‘நிறைய சம்பாதித்தால் நமக்கே நம் மீது மரியாதை வரும்!’
-
சொல்கிறார்கள் ––––––––––––––––– ‘குடும்ப வன்முறையா? நாங்கள் உதவ தயார்!’ ––––––––––––––––
-
2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு
-
இயக்குனர் பாக்யராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
-
இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவது உறுதி
Advertisement
Advertisement