போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

சேலம்; தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், இளைஞர்கள், மாணவர்கள், மக்கள் இடையே போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்-படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சேலம் காந்தி மைதானத்தில் நேற்று மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., சிவகுமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதில், 14 வய-துக்கு மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாண-வியர், விளையாட்டு வீரர்கள், மக்கள் என, 500க்கும் மேற்பட்டோர், 5 கி.மீ., ஓடினர். முன்ன-தாக அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறு-திமொழி ஏற்றனர். மாவட்ட விளையாட்டு நல அலுவலர் கண்மணிதேவி உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.


அதேபோல் ஆத்துார் போதை மீட்பு மறுவாழ்வு மையம், ரோட்டரி மிட்டவுன் சங்கம், பிரீமியர் லீக் கிரிக்கெட் சங்கம், ஆத்துார் டவுன், ஊரக போலீசார் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்-தது. ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், டி.எஸ்.பி., சத்யராஜ் தொடங்கி வைத்தனர். நான்கு முனை சந்திப்பில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலையில் இருந்து, ராணிப்பேட்டை வழியே கடைவீதி வரை சென்று திரும்பினர். அப்போது போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பதாகைகள் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மறுவாழ்வு மைய ஒருங்கிணைப்-பாளர் அஞ்சலிதேவி, தன்னார்வ அமைப்பு நிர்வா-கிகள் பங்கேற்றனர்.

Advertisement