போலியோ சொட்டு மருந்து நாளை சிறப்பு முகாம்

சேலம்: சேலம் மாநகராட்சியில், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம், நாளை காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது. அரசு மருத்துவமனை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அங்கன்வாடி மையங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் என, 197 இடங்களில் முகாம்கள் நடக்க உள்ளன.


இதில், 70,609 குழந்தைகளுக்கு மருந்து வழங்கப்-பட உள்ளது. ஒருவேளை விடுபட்டால், வரும், 29, 30ல், வீடுகள் தோறும் பார்வையிட்டு, மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிறந்த குழந்தை முதல், 5 வயதுக்குட்பட்ட குழந்-தைகளுக்கு மருந்து வழங்கி, போலியோ நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, மாநக-ராட்சி கமிஷனர் லலித் ஆதித்ய நீலம் கேட்டுக்-கொண்டுள்ளார்.

Advertisement