காஸ் சிலிண்டர் கசிவால் தீ பணம், நகை எரிந்து நாசம்

ஆத்துார்: தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்தவர் மாயக்-கண்ணன், 47. இவரது தாய் சிவமாலை, 65. நேற்று இரவு, 8:00 மணிக்கு சமைக்க அடுப்பை பற்ற வைத்தார்.
அப்போது சிலிண்டரில் காஸ் கசிந்து தீப்பற்றி-யது. உடனே வீட்டில் இருந்த அனைவரும் வெளியேறினர்.


அவர்கள் தகவல்படி, அரை மணி நேரத்தில் அங்கு வந்த, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் குடிசை வீடு, பீரோவில் வைத்திருந்த, 48,400 ரூபாய், 2 பவுன், துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல் ஆத்துார், ஜோதி மில் தெருவை சேர்ந்த முகமது ஜிப்போர், 35, வீட்டில், நேற்று இரவு, 7:00 மணிக்கு காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.
உடனே அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்ததால், பொருட்கள் சேதம் ஏற்படவில்லை.

Advertisement