பேக்சியா 11ம் ஆண்டு தொடக்க விழா கொண்-டாட்டம்
சேலம்; சேலத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர் அசோசியேஷன்(பேக்சியா) 11ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாநில நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. நிறுவன தலைவர் பாண்டுரங்கன் தலைமை வகித்தார். மாநில தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.
மாநில பொதுச்செயலர் திருநாவு.குமரேசன் பேசினார். சிறப்பு ஆலோசகர் தயாளன், மாநில நிர்வாகிகள் பழனிசாமி, முருகேசன், வெங்கடா-சலம், செந்தில்முருகன், துரைசாமி, அன்புக்கரசு, சேலம் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்-மான விபரங்கள் வருமாறு:
ஓய்வூதியம்: தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து, 2021 பிப்., 28 வரை ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மட்டும், ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதற்கு பின் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்-களுக்கு வழங்குவது போல், ஓய்வூதிய தொகையை, 1,000ல் இருந்து, 6,500 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
பணிக்கொடை நிதி: கூட்டுறவு சங்க பணியாளர்-களுக்கு, ஓய்வின்போது வழங்கப்படும் பணிக்-கொடை நிதி, 20 லட்சத்தில் இருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்த, பதிவாளரால் ஆணை வழங்-கப்பட்டு, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஆயுள் காப்-பீடு கழகத்தில் வழங்கப்படும் முழு தொகையும் வழங்கப்பட வேண்டும்.
பொதுப்பணி நிலைத்திறன்: பொதுப்பணி நிலைத்திறன், 2018ம் ஆண்டு அரசாணை வெளி-யிடப்பட்டது. இதில் செயலர்கள் இட மாறுதல் செய்யப்படும்போது பெரும்பாலான இடங்களில் செயலர்களும், உடன் பணிபுரியும் பணியாளர்க-ளுக்கும் மற்றும் உறுப்பினர்களும் இடையே இணக்கமான சூழல் இல்லாமல் சங்கங்கள் நட்-டத்தில் செயல் படுகிறது. இதுபோன்ற இடர்பாடு-களை நிவர்த்தி செய்ய வேண்டும் அல்லது பொதுபணி நிலைத்திறன் நடவடிக்கை முழுமை-யாக ரத்து செய்யப்பட வேண்டும். தற்போது பொதுப்பணி நிலைத்திறனில் இடமாற்றம் செய்-யப்பட்டுள்ள செயலர்களுக்கு, ஆண்டு ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் வழங்கப்படாததால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நியாய விலை கடை பணியாளர்கள்: நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள், 'தாயுமானவர்' திட்டத்தில் தற்போது பெற்று வரும் ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டும். பொருட்கள் பொட்டலம் முறையில் வழங்க நட-வடிக்கை எடுக்க வேண்டும். தாயுமானவர் திட்டம், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்-கப்படுவது போல், புது அரசால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி க-ளுக்கும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்-ளது. அதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளதால், உடன் இணைந்து வழங்க நடவடிக்கை மேற்-கொள்ள வேண்டும். அரசு செயல்படுத்தும் பல்-வேறு திட்டங்கள், நியாய விலை கடை பணியா-ளர்கள் மூலம் மட்டும் மேற்கொள்வதால், விற்ப-னையாளர்களுக்கு தனியே ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அகவிலைப்படி ௩ சதவீதத்-துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெரும்பாலான நியாய விலைக்கடை-களில் கழிப்பிடமின்றி, பெண் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுவதால், கழிப்-பறை கட்ட வேண்டும்.
நகை மதிப்பீட்டாளர்கள், கணினி பணியாளர்கள்: கூட்டுறவு கடன் சங்கங்களில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் நகை மதிப்பீட்டாளர்கள் மற்றும் கணினி பணியாளர்களை, பணி நிரந்தரப்-படுத்த வேண்டும். பணி நிரந்தரம் செய்யப்படும் வரை அவர்களுக்கு நிறைவான தொகுப்பூதியம் வழங்க வேண்டும்.
பணி ஓய்வு பெறும் பணியாளர் களுக்கு பணிப்-பயன் வழங்குதல்: கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், ஓய்வு பெறும்போது, தவணை தவறிய கடன்கள் மற்றும் இதர கார-ணங்
களுக்கு பணப்பலன்களை நிறுத்தி வைத்து, ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறது. அப்படி நடக்-கும்போது, மனநிறைவின்றி ஓய்வு பெறும் சூழல் உள்ளதை நிவர்த்தி செய்து, பணப்பலன்களை முழுமையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் தவணை தவறிய கடன்க-ளுக்கு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்-படும் இடர்பாடுகளை களைந்து, நாளிதழில் விளம்பரம் செய்து அதன் மூலம் பணியாளர்-களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் வழங்குதல்: நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த கடன்கள், தற்-போது அருகே உள்ள தொடக்க வேளாண் கூட்டு-றவு கடன் சங்கங்களில் மட்டும் வழங்க வேண்டும் என, பதிவாளர் சுற்றறிக்கை பிறப்பித்-துள்ளார். இதனால் நகர கூட்டுறவு கடன் சங்-கத்தில் பயிர் கடன் பெறும் உறுப்பினர்கள் பெரு-மளவில் பாதிக்கப்படுவதால், இச்சுற்றறிக்-கையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும்
-
திரையுலகின் பன்முக வித்தகர், ‛திரைக்கதை மன்னன்' கே.பாக்யராஜ் ஒரு பார்வை!
-
சொல்கிறார்கள் -––––––––––––– ‘நிறைய சம்பாதித்தால் நமக்கே நம் மீது மரியாதை வரும்!’
-
சொல்கிறார்கள் ––––––––––––––––– ‘குடும்ப வன்முறையா? நாங்கள் உதவ தயார்!’ ––––––––––––––––
-
2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 அதிகரிப்பு
-
இயக்குனர் பாக்யராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
-
இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவது உறுதி