குழாய் உடைந்து குடிநீர் வீண்
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சி அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வருகின்ற குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சங்கரன்கோவிலில் இருந்து அம்மையார்பட்டி, செவல்பட்டி, துலுக்கன் குறிச்சி வழியாக தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் துலுக்கன்குறிச்சி அருகே செவல்பட்டி ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கோடை வெயிலில் குடிநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் வீணாகிறது என மக்கள் புலம்புகின்றனர். எனவே உடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.