கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கம்
தேனி:மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் துவங்கியது.
கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று வடபுதுப்பட்டி அருகே பின்னத்தேவன்பட்டியில் துவங்கியது. முகாமை டி.ஆர்.ஓ., ராஜகுமார், எம்.எல்.ஏ., சபரி ஐயங்கரன் துவக்கி வைத்தனர். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் கிரிஐா, துணை இயக்குனர் சுகுமார், உதவி இயக்குனர்கள் பாஸ்கரன், ஈஸ்வரன், சிவரத்னா, டாக்டர் செந்தில் ராஜகுரு பங்கேற்றனர்.
மாவட்டத்தில் உள்ள 1,02,450 கால்நடைகளுக்கு 54 குழுக்கள் மூலம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் கிரிஐா கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பூசி செலுத்த வேண்டும்.
முகாம் ஜூலை 31 வரை நடக்கிறது. இம்முகாமில் பசு, எருமை மாடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 4 மாத கன்று முதல் சினை, கறவை மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மாடுகளுக்கு அரசு சலுகைகள் நேரடியாக கிடைக்கும். மானிய விலையில் கால்நடைகளுக்கு காப்பீடும் கிடைக்கும் என்றார்.
மேலும்
-
அணுக்கனிம சுரங்க விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்; முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி
-
தினமும் ஒரு திருக்குறள் மனப்பாடம் மாணவர்களுக்கு ஏ.எஸ்.பி., அறிவுரை
-
ரூ 4.10 கோடியில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடம் திறப்பு
-
(பட்டம் வாங்கும் கல்லுாரி) கல்லுாரியில் தீயணைப்பு விழிப்புணர்வு பயிற்சி
-
திறன் மேம்பாட்டு பயிற்சி
-
பயனற்ற ரேஷன் கடையை அகற்றுங்க