பஸ் வராததால் மாணவியர் மறியல்

அவனியாபுரம்: மதுரையில் இருந்து குசவன்குண்டுக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ் ஓராண்டாக நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள், மாணவர்கள் பஸ் ஏற 2 கி.மீ., நடந்து சோளங்குருணி செல்கின்றனர். பஸ்சை மீண்டும் இயக்க பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் குதிரைகுத்தி கிராமப் பகுதி மக்கள், பள்ளி மாணவியர் காலை 7:00 மணி முதல் 11:15 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குசவன்குண்டு ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. திருப்பரங்குன்றம் போக்குவரத்து கிளை மேலாளர் அசோக், வி.ஏ.ஓ. பாஸ்கர், கூடக்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியம் பாக்கியம் 2 நாட்களில் பஸ் விட ஏற்பாடு செய்வதாக சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Advertisement