மாணவர் தற்கொலை

மரக்காணம்: மரக்காணம் அருகே பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

மரக்காணம் அருகே உள்ள ஏந்துார் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் மாரீஷ்,17 பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றார். கடந்த சில மாதங்களாக சரியாகப் படிக்காமல் நண்பர்களுடன் சுற்றி வந்துள்ளார். இது குறித்து பெற்றவர்கள் கண்டித்துள்ளனர் இதனால் மனமுடைந்த மாரீஷ் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனே அருகில் இருந்தவர்கள்

்வரை மீட்டு பிரம்மதேசம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மாணவர் இறந்து விட்டதாக கூறினார். பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement