மாற்றுத்திறனாளிகள் மறியல்: 100 பேர் கைது

திண்டுக்கல், ஜூலை 2-

தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது, மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை முழுமையாக வழங்க வேண்டும், திட்டத்துக்கான‌ நிதி ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். கருப்புச்சட்டை, பேட்ஜ் அணிந்து சட்ட நகலை எரித்து ரோடு மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர்.

Advertisement