30 நாட்கள் தான் தவெக ஆட்சி என்று எந்த தைரியத்தில் ஸ்டாலின் கூறுகிறார்; கேட்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்
சென்னை: 30 நாட்கள் தான் தவெக ஆட்சி இருக்கும் என்று எந்த தைரியத்தில் ஸ்டாலின் கூறுகிறார் என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது பேட்டி: திமுகவினர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும் எந்த பிரச்சனையும் இல்லை. தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்த சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து ரூ.35 கோடி, ரூ.50 கோடி என தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேரம் பேசியவர்கள் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதனால் வேற வழி இன்றி கவர்னரிடம் திமுகவினர் புகார் அளித்து கதறிக் கொண்டிருக்கின்றனர்.
5 வருடம் அவர்கள் ஆட்சி நடத்திய லட்சணத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்கான விளைவு தான் இந்த தேர்தலில் மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். மக்களிடம் நீங்கள் நல்லபடியாக நடந்து கொண்டால் இந்த பிரச்னை உங்களுக்கு ஏன் வரப்போகிறது. ஸ்டாலின் இந்த அரசு 30 நாட்கள் தான் இருக்கும் என்று சொல்கிறார். 30 நாட்களில் ஸ்டாலின் மிகப்பெரிய தலைவர் ஆகிவிட்டாரா? தேர்தல் முடிந்து 40 நாட்கள் ஆகிவிட்டது. இந்த 40 நாட்களில் ஸ்டாலின் மிகப்பெரிய தலைவராகி விட்டாரா அல்லது மிகப் பெரிய ஆளுமை ஆகிவிட்டாரா?
ரூ.40 கோடி, ரூ.50 கோடி வைத்திருந்தால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாங்கி விடலாமா? 30 நாட்கள் தான் இந்த ஆட்சி இருக்கும் என்று என்ன தைரியத்தில் ஸ்டாலின் சொன்னார். நாங்கள் 120 எம்எல்ஏக்களுடன் வலுவான ஆதரவுடன் ஆட்சியில் இருக்கிறோம். என்ன தைரியத்தில் 30 நாட்களுக்கு மேல் இந்த ஆட்சி இருக்காது என்று ஸ்டாலின் சொல்லி வருகிறார். இவர்கள் செய்து வரும் வேலையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசுக்கு எல்லா வழிகளிலும் தொந்தரவு கொடுத்து வருகிறார்கள். ஆனாலும் நாங்கள் மக்கள் பணியை தொடர்ந்து செய்வோம்.
மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் எதற்கு தயங்கவில்லை; யாருக்கும் பயப்படவில்லை. மக்களை தவிர வேறு யாருக்கும் இந்த அரசு பயப்படாது. இவர்கள் இரண்டு பேரும் அந்த கட்சிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால் அந்தக் கட்சிக்கு நல்லது. இபிஎஸ் அந்த கட்சியை விட்டு விலகினால் ஓரளவு அந்த கட்சி காப்பாற்றப்படும்.
கட்சிக்கு கடைசியாக ஏதும் நல்லது செய்ய விரும்பினால், கட்சியை காப்பாற்ற நினைத்தால், ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் குடும்பம் அந்த கட்சியை விட்டு விலக வேண்டும். இபிஎஸ் மற்றும் இபிஎஸ் குடும்பம் அந்த கட்சியை விட்டு விலகினால் நல்லது நடக்கும். திமுகவினர் என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ அதை இபிஎஸ் பேசிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
30 - ஆண்டுகள் சென்றாலும் முதல்வர் விஜய்யின் ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது விஜய் என்றால் வெற்றி இது ஜனநாயக வெற்றி திராவிட மாடல் கட்சிகளின் எதேச்சாரத்தை அறவே ஒழித்திட உதித்த கட்சி உதித்த தலைவர் அவரின் பெயர் விஜய் - வெற்றி அறிகுறி என்னதான் இரு திராவிட கட்சிகளும் அவரவர்கள் பிள்ளைகளை இந்த அரசியலில் கொண்டுவர நினைத்தாலும் முயற்சித்தாலும் அவர்களே காணாமல் போயிடுவார்கள் ஒரே ஆட்சியில் புள்ளையை எம். எல்.ஏ வாக ஆக்கி உடனே அமைச்சர் ஆக்கி உடனே துணைமுதவராக்கிய பெருமை வேறு எந்த கட்சிக்கும் எந்த மாநிலத்திலும் கிடையாது அதனால்தான் இந்த அதளபாதால வீழ்ச்சி இனி எழுந்திருக்கவே முடியாத வீழ்ச்சி இங்கே இன்னொரு கட்சி பகைவனானும் பரவாயில்லை கைகோர்த்து அரசியல் செய்யாமல் என்ற நப்பாசையில் புள்ளயாண்டானை தூது அனுப்பியதின் விளைவுதான் இப்போது அந்த கட்சியே கரைகிறது நாளடைவில் அந்த கட்சி இருக்கும் இடமே தெரியாமல் போயிடும் கெட்ட எண்ணம் கெட்ட முறைதான் அரசியலில் தான் மட்டும்தான் முதல்வராக வரவேண்டும் என்ற நப்பாசையை யாரை விட்டது உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா
எழுதிக்கொடுத்ததை அப்படியே படிச்சிட்டாரு .... மாஜி பொம்மைக்கு மனசெல்லாம் பச்சப்புள்ள மனசு போல .... பாவம் உட்ருங்க ......
107 எம் எல் எ களை வைத்துக்கொண்டு எந்த தைரியத்தில் நீங்கள் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நடவுக்கு என கூறினீர்கள். எல்லாம் ஒரே குப்பைதான். அதுபோக ஒரே நாளில் த வெ க எம் எல் எ விலையை 35 கோடியிலிருந்து 50 கோடியாக உயர்திவிடீர்கள் . மதிய நிலவரம் என்ன ?
107 MLA களை வைத்துக்கொண்டு எந்ததைரியத்தில் இந்த ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என கூறீனீர்கள். எல்லாம் குபையும் ஒரே குப்பைதான். பேச்சை குறையுங்கள். பேச்சால் மட்டுமே வளர்ந்து பேசி பேசியே அழித்த கட்சி உங்கள் தாய் கட்சி.
த வெ க விற்கு வீரியம் இருக்குன்னு மக்கள் நினைச்சாங்க வாய்ப்பு கொடுதான்ங்க .. இவரு party fun ல தான் வீரியமா இருக்காரு. பிரெஷ் ஆ இருக்காரு. மக்கள் பிரச்சனைன்னா ஒரு பொந்துக்குள்ள ஒளிஞ்சுக்கிறது . நீங்க பண்ற கூத்துக்கு நியாயம் சொல்றீங்க . அன்று கரூருக்கு மக்களுக்காக ஓடியவர் . தேர்தல் நேரத்திலையும் குடியுரிமை பிரச்சனையை கையில் எடுத்து வெற்றிகண்டவர் எங்கள் தலைவர் ஸ்டாலின் அவர்கள். ஆகவே தைரியத்தை பற்றியெல்லாம் வாஷிங் பவுடர் பேசக்கூடாது. மக்கள் ரோட்டிற்கு வந்து போராட்டம் செய்ய 30 நாட்கள் கூட தேவையில்லை . ஒரு நாள் போதும் . மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை உணராமல் குதிரை பேரத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் த வெ க மமதை வீழ்த்தப்படும் .
என்னய்யா ஒன்னும் தெரியாத வெங்காயமா?... உங்க ஆளுகலை வெலைக்கு வாகிங்ரலமுனு காசு திமிர் தான்.அவனுக இருவரும் பழுத்த கொலைகார பாதகன்கள்...அரசியல் வாதிகள். எந்த மானங்கெட்ட செயலையும், செய்வான்க... ஆட்சி, அதிகாரம் இல்லா விட்டால் செத்துருவானுக... காலம் சொல்லும்....கொல்லும்...
1.76 லட்சம் கோடிகளும் பிளஸ் 13.5 லட்சம் கோடிகளும் உள்ள தைரியம்தான். திருட்டு த்ரவிஷ கழகங்கள் நாட்டுக்கு கேடு
திமுக ஊட்டணி காட்சிகள், அதிமுகவிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்களை வைத்து ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்று எப்படி விஜயும் அமைச்சரவை கும்பலும் கூறுகிறார்கள்?
107 இடங்கள் மட்டுமே உள்ளது என்ற தைரியத்தில் தான்
மக்கள் தனி மெஜாரிட்டி கொடுத்த மாதிரி
இந்நேரம் திமுக 108 இருந்தால்
அதிமுக உடன் சேர்ந்து நீங்கள் ஆட்சி அமைத்து இருப்பீர்கள்
முருகா...வெறும் அரை நாளில் கொளத்தூரில் நடந்தது...தமிழ்நாட்டிலும் நடக்கும்
50 நாட்களில் நீங்கள் நடத்திவரும் ஆள் பிடிக்கும் ஆட்சியை முறையை வைத்துதான் சொல்கிறார் . திரு ஸ்டாலின் மட்டுமல்ல மனசாட்சியுள்ள ஒவ்வொரு தமிழன் மனதில் இருப்பதும் இதேதான் .மேலும்
-
சட்டப் பணிகள் குழு தலைவராக நீதிபதி பி.வி.நாகரத்னா நியமனம்
-
ஆற்றில் தீ பிடித்து எரிந்த புற்கலால் பாதிப்புக்குள்ளாகும் கால்நடைகள்
-
சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
-
பெயிண்டர் தற்கொலை போலீசார் விசாரணை
-
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டில் 4. 75 மெட்ரிக் டன் கரும்பு அரவைக்கு இலக்கு
-
பெண் மீது தாக்குதல் கணவர், மாமனார் கைது