பெண் மீது தாக்குதல் கணவர், மாமனார் கைது  

காட்டுமன்னார்கோவில்: பெண்ணை தாக்கிய கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர். 

காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடியைச் சேர்ந்த காசிநாதன் மகன் சரவணன் 33; இவரது மனைவி கோகிலாதேவி 26; இந்த தம்பதிக்கு, இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

இது தொடர்பாக, நேற்று முன்தினம் கோகிலா தேவி மற்றும் அவரது சகோதரர் திருச்சின்னபுரம் சுந்தரேசன் மகன் மெய்யழகன் 34; என்பவருடன் போலீசில் புகார் கொடுக்க பைக்கில் சென்றார். அப்போது அவரது கணவர் சரவணன் மற்றும் மாமனார் காசிநாதன் இருவரும் அவர்களை வழிமறித்து, கோகிலாதேவியை ஆபாசமாக திட்டி தாக்கினர். இதனை தடுத்த மெய்யழகனையும் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கோகிலாதேவி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து, சரவணன் 33; காசிநாதன் 55; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.





 

Advertisement