கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டில் 4. 75 மெட்ரிக் டன் கரும்பு அரவைக்கு இலக்கு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2026 – 2027 ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 4. 75 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 -2026 ஆம் ஆண்டு சிறப்பு அரவை பருவம் மற்றும் 2026- 2027 ஆம் ஆண்டு முதன்மை அரவ பருவம் துவக்க விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பத்மஜா, சர்க்கரை துறை ஆணையர் கண்ணன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ், திருக்கோவிலுார் எம்.எல்.ஏ., பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். கரும்பு அரவை வேண்ளான் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் வினோத் துவக்கிவைத்தார்.

கடந்த 2025- 2026 அரவை பருவத்தில் 11500 ஏக்கர் கரும்புகளை அறுவடை செய்து சுமார் 4.32 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்தனர். இதேபோல் 2026- 2027 ஆம் ஆண்டு முதன்மை அரவைப் பருவத்தில் 12750 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டு 4.75 மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 6200 கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.

விவசாயிகளின் நலன் கருதி கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 7 உட்கோட்ட கரும்பு அலுவலகங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு நேரடியாக விவசாயிகளிடம் கரும்பு பதிவு செய்து அதன் மூலம் குறித்த காலத்தில் கரும்பு வெட்டி சக்கர ஆலைக்கு ஏற்றியும் வருகின்றனர். ஆலை தெற்கு, ஆலை வடக்கு ,கடுவனுார், சங்கராபுரம், அரியலுார் தெற்கு, அரியலுார் வடக்கு, ஈருடையாம்பட்டு என ஏழு உட்கோட்டை அலுவலகம் மூலம் கரும்பு பதிவு செய்து வருகின்றனர். கரும்பு அரவை செய்து அவற்றிலிருந்து சர்க்கரை வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் கோவிந்தராஜ், ஜீவா, ஆர்.டி.ஒ., முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement