தவெக ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம்; செந்தில் பாலாஜியின் வீடுகளில் போலீஸ் தேடுதல் வேட்டை

20


கரூர்: தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியாக, அக்கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுகவினர் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் யூடியூபர் திருநாவுக்கரசு மற்றும் கரூரைச் சேர்ந்த செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே, சென்னையைச் சேர்ந்த செல்வன், சீனிவாசன், ராஜேஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவரும், அதிமுக பிரமுகருமான சீனிவாசன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை சென்னை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை கைது செய்வதற்காக, கரூரில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, பண்ணை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.


சிறப்பு வீடியோ!

செந்தில்பாலாஜியை தேடும் போலீசார்: பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement