சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் ஆதரவாளர்களுடன் தவெகவில் ஐக்கியம்
நமது நிருபர்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் இன்று (ஜூலை 02) தவெகவில் ஐக்கியமாகினர்.
அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கரூரை சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் கடந்த சட்டசபை தேர்தலில், கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க., உள்கட்சி பிரச்னை காரணமாக, கரூர் தொகுதியில் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
அதேபோல் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இருவரும் அதிமுகவில் இருந்து விலகினர். இந்நிலையில் இன்று (ஜூலை 02) இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் த.வெ.க.,வில் இணைகிறார். இதற்கான இணைப்பு விழா, மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயின்ட்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.
இந்த இணை ப்பு விழா அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் முன்னிலையில் நடந்தது. கரூர் விஜயபாஸ்கருடன், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர். அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகள் பலர், அக்கட்சியில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து இரண்டு முன்னாள் அமைச்சர்கள் விலகி தவெகவில் இணைந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மாமல்லபுரத்தில் அதிமுகவினர் தவெகவில் இணையும் விழா; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தலைவர் விஜய் இல்லை . உங்களுக்கான மரியாதையை தெரிந்துகொள்ளுங்கள் .இணைப்பு விழாவில் அவர்தானே பிரதானமாக இருக்கவேண்டும் . வைரக்கற்காளாகிய நீங்கள் சாதாரண கூழாங்கற்கள் ஆகிவிட்டீர்கள் .
பாஸ்கர்கள் இன் அவுட் யார் யார்
இப்போது தமிழ்நாடு அன்னிய மதம் பிடித்தவர்கள் கையில் இருக்கிறது, இந்த நிலைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் தான் முழு பொறுப்பு, அதிமுகவுக்கும் பங்கு உண்டு, ஆனாலும் நீங்களும் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான், வேறு வழியின்றி நீங்கள் அதிமுக வில் இருந்துட்டீங்க. இந்த நாட்டிற்கு உரிய மதம், சனாதனம், வாழ்வில் முறை ஆகியவற்றை அழித்து உங்கள் குழந்தைகளும், குடும்பமும் பணத்தில் வாழ ஏதோவொரு அரசியல் பவர் தேவை என்பதால் இந்த ஏழைகள் நிறைந்த நாட்டை சுரண்டி தின்பதற்கு இந்த மாதிரியான கூட்டத்துடன் சேர்வது ஆச்சரியம் ஒன்றுமில்லை. உண்மையாகவே இந்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இந்த நாட்டை நேசிக்கும் கட்சியில் இருந்து செய்யலாம் புரோ
இரண்டு விஜயபாஸ்கர் பெயரிலும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது இப்போது தூய சக்தி அவர்களை தூமை ஆக்கி விட்டதா . சட்டம், ஒழுங்கு, நீதி, மக்கள் தீர்ப்பு , மக்கள் பணம், எல்லாம் கேலி கூத்தாகிவிட்டது விஜய் வேண்டாம் என்று வோட்டு போட்ட மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி அமைச்சர் பதவி வாங்குறான் இன்னொரு பக்கம் ராஜனிமா செய்கிறான் இதை தேர்தல் ஆணையம் நீதிமன்றம் மக்கள் ஆளுநர் எல்லோரும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்ன ஜனநாயகம் இது முழுக்க முழுக்க பணம், பதவி செய்யும் வேலை. மக்கள் பணத்தை சூறை ஆடி கொண்டு கொள்ளை அடித்து கொண்டவர்கள் பங்கு பிரித்து இருக்கிறார்கள்
சோறு கண்ட இடம் சொர்க்கம் ..... 2031 இல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தால் அங்கே ஓடுவார்களோ ??
நல்லதோ கெட்டதோ முதலில் மக்கள் விரோத திராவிடம் அழியட்டும்.
தொலைந்தன
துஷ்ட சக்தி ஆதாரம் 21 ....
குஷ்ட கட்சியை விட இந்த துஷ்ட சக்தி இப்போதைக்கு மேல், இவர்களையும் பின்னாடி ஒரு ஆள் வந்து தூங்குவான். ஆனால் தீய சக்தி அறவே கூடாது.
நல்லவர்கள், வல்லவர்களாக இருப்பவர்கள், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை இணைத்து கொள்வதில் தவறில்லை. ஆனால் ஊழலில் கை தேர்ந்த நபர்களை இணைத்துக் கொள்வதால் அவப் பெயர் மட்டுமே மிஞ்சும்
தளபதி விஜய் அவர்கள் மாற்று கட்சியிலிருந்து வருபவர்களை தவேகவில் சேர்க்கக்காரணம், அவர்களை அப்ரூவர்களாக்கி முந்தைய ஆட்சிகளின் ஊழல் விவரங்களை வெளிக்கொண்டுவர தான். இது ஸ்காட்லாந்து காவல் துறையின் யுக்தி, திருடர்களை வைத்தே திருடர்களை பிடிப்பது.மேலும்
-
சட்டப் பணிகள் குழு தலைவராக நீதிபதி பி.வி.நாகரத்னா நியமனம்
-
ஆற்றில் தீ பிடித்து எரிந்த புற்கலால் பாதிப்புக்குள்ளாகும் கால்நடைகள்
-
சுகாதார நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
-
பெயிண்டர் தற்கொலை போலீசார் விசாரணை
-
கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டில் 4. 75 மெட்ரிக் டன் கரும்பு அரவைக்கு இலக்கு
-
பெண் மீது தாக்குதல் கணவர், மாமனார் கைது