ஒரே நாளில் 16,000 கோடி ரூபாய் முதலீடு பெற்ற கடன் பத்திரங்கள்
கார்ப்பரேட் கடன் பத்திரங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில், 15,960 கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்துள்ளன; குறிப்பாக பொதுத்துறை மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பத்திரங்கள் அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளன.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவால் பணவீக்கம் குறையும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணங்கள் ஆகும். கார்ப்பரேட் பத்திரங்களுக்கான இந்த வரவேற்பு தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் ஜூலை 7ம் தேதி 'என்.டி.பி.சி.
கிரீன் எனர்ஜி' நிறுவனம் 2,500 கோடி ரூபாய்க்கான 10 ஆண்டு கடன் பத்திரங்களை வெளியிட உள்ளது. நல்ல வரவேற்பு கிடைத்தால், 'கிரீன்ஷூ' ஆப்ஷன் வாயிலாக கூடுதலாக 2,000 கோடி ரூபாய் வரை திரட்டவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழை நெஞ்சில் சுமந்து வாழும் பண்பு தொடர வேண்டும்: அண்ணாமலை
-
பைனான்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவர் கைது
-
இன்னும் இருக்கு இலக்குகள்: ஜூடோவில் சாதித்த சக்தி
-
நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்: ஆஸி பிரதமர் அல்பானீஸ் மகிழ்ச்சி
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மிஸ்டர் மூளைக்காரன் 'அப்பா' வின் மவுன ராகம்!
Advertisement
Advertisement