தென்னங்கன்று நட்டு அரசு இடம் ஆக்கிரமிப்பு பாகூர் தாசில்தார் அதிரடி
பா கூர் அடுத்த கரையாம்புத்துாரில் ஏரிக்கரை அருகே உள்ள அரசு இடத்தை அதே பகுதியை சேர்ந்தவர் விவசாயம் செய்து வந்துள்ளார். அதற்கு அவர் அரசுக்கும் வரி செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் வேறு ஒரு நபர், நேற்று முன்தினம் அரசு இடத்தை ஆக்கிரமித்து வேலி அடைத்தார். மேலும், இரவோடு இரவாக தென்னங்கன்றுகளை நட்டார். அரசுக்கு சொந்தமான இடத்தில் நீண்ட கால பயிர்களை சாகுபடி செய்து நிரந்தமாக ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக வருவாய் துறைக்கு நேற்று புகார் குவிந்தது.
அதனைத் தொடர்ந்து பாகூர் தாசில்தார் ராஜலட்சுமி மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடப்பட்டிருந்த தென்னங்கன்றுகளை அகற்றினர். தாசில்தாரின் இந்த அதிரடி நடவடிக்கையால், கரையாம்புத்தாரில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழை நெஞ்சில் சுமந்து வாழும் பண்பு தொடர வேண்டும்: அண்ணாமலை
-
பைனான்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவர் கைது
-
இன்னும் இருக்கு இலக்குகள்: ஜூடோவில் சாதித்த சக்தி
-
நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்: ஆஸி பிரதமர் அல்பானீஸ் மகிழ்ச்சி
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மிஸ்டர் மூளைக்காரன் 'அப்பா' வின் மவுன ராகம்!
Advertisement
Advertisement