ரூ.3 லட்சம் குட்கா கடத்திய இருவர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில், மத்திகிரி ஸ்டேஷன் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியிலிருந்து, திருச்சிக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது.

இதனால், லாரி டிரைவர்களான திருச்சி முசிறி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, 28, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராமசாமி, 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஒரு டன் புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement