உடல் நலத்திற்கு மன நலம் மிக அவசியமானது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அறிவுரை

1

நாக்பூர்: உடல் நலத்திற்கு மன நலம் மிக அவசியமானது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அறிவுரை வழங்கி உள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்த கேள்விக்கு மோகன் பாகவத் அளித்த பதில்: நேற்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதை நீங்கள் பார்க்கலாம். அவர் தெரிவித்த அதே நிலைப்பாட்டையே ஆர்எஸ்எஸ் கொண்டுள்ளது. இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "உடல் நலத்திற்கு மன நலம் மிக அவசியமானது. உடல் நலிவடையும்போது அது உடலை மட்டுமல்ல, மனதையும் பலவீனப்படுத்துகிறது. ஆரோக்கியமான உடலில் தான் ஆரோக்கியமான மனம் இருக்கும்," என்றார்.

ராமர் கோவில் நன்கொடை முறைகேடு விவகாரம் குறித்து ஆர்எஸ்எஸ் அறிக்கை செய்தி தினமலர் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement