சூடாமணிபுரத்தில் மேய்ச்சல் நிலமான பூங்கா

காரைக்குடி:காரைக்குடி சூடாமணிபுரத்தில் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட பூங்காக்கள் பராமரிப்பின்றி வீணாகி வருவதோடு, ஆடு மாடு மேயும் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது.

காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சூடாமணிபுரம் பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் கடந்த 3 பூங்காக்கள் திறக்கப்பட்டது. தலா ரூ.63 லட்சம் மதிப்பீட்டில், சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு திடல், நீரூற்று, புல்வெளி, நடைபாதை பயிற்சி இடம் உள்ளிட்ட பல்வேறு வசதியுடன் பூங்கா அமைக்கப்பட்டது.

மாலை நேரத்திலும் விடுமுறை நாட்களிலும் சிறுவர்கள் பூங்காவில் விளையாடி வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் அப்பகுதியில் குடியிருப்போர் வாக்கிங் சென்று வருகின்றனர். அனைத்து வசதியுடன் சிறப்பாக செயல்பட்டு வந்த பூங்காக்கள் போதிய பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து வருகிறது. இரவு நேரங்களில் போதிய மின் விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கி கிடப்பதோடு பூங்காவை சுற்றி சமூக விரோதச் செயல்களும் நடக்கிறது. பூங்கா நுழைவுவாயில் அருகே குப்பை கிடங்கு இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில் காம்பவுண்ட் சுவர் உடைந்து கிடப்பதால், மாடுகள் ஆடுகள் புற்களை மேய்ந்து வருகிறது. இதனால் பூங்காவை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Advertisement