மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை; மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்
மும்பை: மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் பல பகுதிகளில் 200 மி.மீ.,க்கும் அதிகமான மழை பதிவாகி உள்ளது.
தமிழகம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்தாலும், மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும் கனமழையால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. புறநகர் ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.



வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், மிகவும் அவசியமானால் மட்டுமே பொதுவெளிக்கு வருமாறும் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மும்பையில் இன்று காலை வரை 200-300 மி.மீ மழை பதிவாகியுள்ளது; இன்று முதல் நாளை காலை வரை மேலும் 200-300 மி.மீ மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிந்த 23 மணி நேரத்தில் மும்பை சுற்று வட்டாரத்தில் பதிவான மழைப்பொழிவு பின்வருமாறு:
* மாதேரான்- 408 மி.மீ
* டோங்கர்வாடி - 398 மி.மீ
* பீரா - 386 மி.மீ
* தமினி - 310 மி.மீ
* கார்ஜத் - 291 மி.மீ
* கோபோலி - 285 மி.மீ
* பான்வேல்- 282.2 மி.மீ
* ஷிர்கான் - 275 மி.மீ
* கலாபூர் - 274 மி.மீ
* பால்கர் அக்ரி - 273 மி.மீ
* தாவ்தி - 268 மி.மீ
* கொலாபா- 265.6 மி.மீ
* லோனாவ்லா - 263 மி.மீ
* ராம் மந்திர் - 254.5 மி.மீ
* டாஜிபூர் - 247 மி.மீ
* துத்கங்கா - 247 மி.மீ
* ராதானகரி- 238 மி.மீ
* பீமாஷங்கர் - 237 மி.மீ
* சாந்தாக்ரூஸ் - 227.7 மி.மீ
* ராஜபூர் (ரத்னாகிரி) - 216 மி.மீ
* கொய்னா (நாவ்ஜா) - 210 மி.மீ
* போபாலி - 210 மி.மீ
வாசகர் கருத்து (1)
Aam Aathmi (Mango Man) - mumbai,இந்தியா
05 ஜூலை,2026 - 15:15 Report Abuse
மெரின் ட்ரைவிலிருந்து ஆறடி உயரத்தில் மும்பை நகரம் .. கடலிலும் அலைகள் உயர்ந்திருக்கின்றன .. மழை நீர் போக இடம் இல்லை .. ஆனாலும் மும்பை மக்கள் மழை வந்தால் குடிநீர் பிரச்னை இருக்காது என்று அனுசரித்து போவது வழக்கம் ... 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement