தென்மாப்பட்டில் மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்துார்:திருப்புத்துார் தென்மாப்பட்டு அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 25 வண்டிகள் பங்கேற்றன.

பந்தயம்சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட பந்தயத்தில் 25 வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகள் பங்கேற்றன. கொளுஞ்சிப்பட்டி மதுமிதாநாச்சியார்,தென்மாப்பட்டு சரவணன்,பீர்க்கலைக்காடு பெரியசாமி,கல்லாப்பேட்டை மந்தையம்மன் ஆகியோர் முதல் நான்கு இடங்களை வென்றனர். சின்னமாடு பிரிவில் 16 வண்டிகள் பங்கேற்றன. தென்மாப்பட்டு முத்துக்குமார், பிள்ளையார்பட்டி ரெத்தினா டிராவல்ஸ், தென்மாப்பட்டு குமார், பட்டாங்காடு அடைக்கலம் ஆகியோர் முதல் நான்கு இடங்களை வென்றனர். வெற்றி பெற்ற உரிமையாளர்கள்,சாரதிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.

Advertisement