இரு நாடுகளின் ராணுவத்தை அழித்துவிட்டோம்: டிரம்ப் தம்பட்டம்

8


வாஷிங்டன்: வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் ராணுவத்தை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிட்டது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவில் நடந்து வரும் சுதந்திர கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: வெனிசுலாவைப் பாருங்கள், ஈரானைப் பாருங்கள். நாங்கள் அவர்களின் ராணுவத்தையே ஒழித்துவிட்டோம். எனது முதல் பதவிக்காலத்தில் ஆயுதப்படைகளை புனரமைக்க தனது நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளே இந்த ராணுவ திறனுக்கு காரணம்.

உலகின் மிகவும் வலிமையான மற்றும் சக்திவாய்ந்த நாடாக நாம் உருவானது வரலாற்றின் தற்செயலான நிகழ்வு அல்ல. அமெரிக்கா விரும்பினால் எஞ்சியிருக்கும் ஈரான் தலைமையை ஒரே அடியில் ஒழிக்கும் திறன் தன்னிடம் இருக்கிறது. அவர்கள் அனைவரும் அங்கே ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள்.

ஒரே ஒரு தாக்குதலில் அவர்கள் அனைவரையும் நம்மால் வீழ்த்திவிட முடியும். ஆனால் நாம் அதை செய்ய போவதில்லை. ஏனென்றால் அப்படி செய்தால் பேச்சு நடத்த நமக்கு யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

Advertisement