கஞ்சா விற்றவர் கைது

திண்டுக்கல், ஜூலை 15-

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி இந்திரா நகர் ரயில்வே பாதை அருகே மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, எஸ்.ஐ.காதர்மைதீன்  தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்ததில் அவர், மேட்டுப்பட்டி  எம்.ஜி.ஆர்.நகர் கூலி தொழிலாளி அமுல்ராஜ் 45 எனவும், கஞ்சா விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த  போலீசார், 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆயக்குடியில் திருட்டு



ஆயக்குடி,ஜூலை 15-

பழநி ஆயக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று முன் தினம், இரவு நடந்த திருட்டு நடந்தது இரண்டு கிராம் தங்க நகை பறிபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பழநி ஆயக்குடி குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் 45. நேற்று முன்தினம் திருச்சிக்கு கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். நிலையில் நேற்று மூன்று தினம் இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த இரண்டு கிராம் தங்க நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். நேற்று காலை வீடு திரும்பிய ரமேஷ் கதவு உடைக்கப்பட்டு இருப்பது அறிந்து போலீசாருக்கு தகவல் அளித்தார் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆயக்குடி போலீசார், திருட்டு குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement