‘திருட்டு வழக்குல... தடயம் கிடைக்கல...’ போலீசார் புலம்பல்

மாவட்டத்தில், திருமுதுகுன்றம் சப் டிவிஷன், அதிகார நந்தி நகர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட திருமாறன்பாடியில் கடந்த ஜூன் மாதம், 20ம் தேதி வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து இரு வீடுகளில் பத்தரை சவரன், 25 ஆயிரம் ரொக்கத்தை அரை நிர்வாண கொள்ளையர்கள் இடுப்பில் கத்தியை சொருகி வைத்திருந்தபடி மக்களை அச்சுறுத்தி திருடி சென்றனர். 

மேலும், அதே பகுதியில் 8 வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயன்றனர். மக்கள் கூச்சலிட்டதால் தப்பி ஓடினர். சம்பவம் குறித்து கிராம மக்கள் அவசர எண் 100க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், உள்ளூர் போலீசார் மற்றும் மோப்பநாய், தடய அறிவியல் நிபுணர் வரவழைத்து தடங்களை சேகரித்தனர். 

சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களும் 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும், திருட்டு சம்பவம் நடந்த நேரங்களில் அப்பகுதியில் பயன்படுத்திய மொபைல் எண் விபரங்களை சேகரித்து சந்தேக நபர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர். 

ஆனால், 3 வாரங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த தடயமும் கிடைக்காமல் போலீசார் புலம்பி வருகின்றனர். 

Advertisement