விவசாயி வீட்டில் 19 சவரன் கொள்ளை திண்டிவனம் அருகே துணிகரம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே விவசாயி வீட்டில் 19 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 62; இவர் நேற்று காலை 10:00 மணிக்கு தனது நிலத்தில் விவசாய வேலைக்காக குடும்பத்துடன் சென்றவர் மாலை 3:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த 19 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது.
இதேபோன்று, சலவாதி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி, 40; இவர் நேற்று காலை 10:15 மணிக்கு அங்கன்வாடிக்கு வேலைக்கு சென்றவர் பிற்பகல் 3:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் பூஜை அறையில் இருந்த 1 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்த புகார்களின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.