மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடு கூட்டம்
கோவை: கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027 தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் ராமகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளான வீடுகள் பட்டியலிடல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு முறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
பொதுமக்கள் தங்களின் விவரங்களை se.census.gov.in என்ற இணையதளம் மூலம் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளலாம்.
ஆகஸ்ட் 1 முதல் 30 வரை கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் வீடு வீடாகச் சென்று, விடுபட்ட வீடுகளின் பட்டியலை சேகரிப்பார்கள் என்றனர் அதிகாரிகள்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement