தேசிய போஸ்டர் போட்டி; மதுரை மாணவிக்கு பரிசு
மதுரை: இந்திய கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான தேசிய அறக்கட்டளை (இன்டாக்) சார்பில் 7 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஓவியம், போஸ்டர், கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.
ஒரு பூர்வீக மரம், செடி, மலரை ஓவியமாக வரைவதோடு போஸ்டராகவும் தயாரித்து அது குறித்து கட்டுரை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 12 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் தேர்வான 15 பேரில் மதுரை மகாத்மா குளோபல் கேட்வே பள்ளி மாணவி சஸ்மிதாவும் ஒருவர். இவர் கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலரை வரைந்து போஸ்டர் தயாரித்து கட்டுரை எழுதினார்.
டில்லியில் நடந்த பரிசளிப்பு விழாவில் டிராபி வழங்கப்பட்டது. மாணவியை பள்ளி முதல்வர் மீனா, ஓவிய ஆசிரியர் ரவிக்குமார் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறிய வீடு கட்ட பிரீகாஸ்ட் கட்டுமான முறை உகந்ததா?
-
சுவர்களில் ஈரம்...அலர்ஜி ஏற்படுத்தும்! ஆரம்பத்திலேயே தடுப்பது கட்டடத்துக்கும் நலம்
-
நில வழிகாட்டி மதிப்பு குழப்பங்களுக்கு தீர்வு என்ன?
-
நகைகள் ஏற்றுமதி மே மாதம் 26% உயர்வு
-
ஏலக்காய் ரூ.4,149 கோடிக்கு ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு
-
இந்தியாவில் சீன போன்கள் விற்பனை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு
Advertisement
Advertisement