இந்தியாவில் சீன போன்கள் விற்பனை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு

புதுடில்லி: நம் நாட்டில், 2026ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் விற்பனை, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளதாக, கவுன்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை:

பணவீக்கம் மற்றும் அன்றாட செலவுகள் அதிகரித்துள்ளதால், நடுத்தர மற்றும் குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான நுகர்வோர் புதிய போன்கள் வாங்குவதை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளனர். இதனால், இந்த வகை ஸ்மார்ட்போன்களின் விற்பனையை அதிகம் சார்ந்துள்ள சீன நிறுவனங்கள், கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில், சந்தை பங்கில் சரிவை சந்தித்துள்ளன.

இதன் காரணமாக, ஒட்டுமொத்த சீன ஸ்மார்ட்போன்களின் விற்பனை அந்த காலாண்டில் கடந்த ஆறு ஆண்டுகள் காணாத வீழ்ச்சி கண்டது.

விலை குறைந்த மொபைல்களுக்கான வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில், பல நிறுவனங்கள் தங்களது 4ஜி மொபைல் போன் வினியோகத்தை விரிவுபடுத்தியுள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement