சுவர்களில் ஈரம்...அலர்ஜி ஏற்படுத்தும்! ஆரம்பத்திலேயே தடுப்பது கட்டடத்துக்கும் நலம்
மழைக்காலம் வந்துவிட்டாலே பல வீடுகளில் தொடங்கும் ஒரு முக்கிய தலைவலி கூரை கசிவு. ஆரம்பத்தில் சிறிய ஈரப்பதமாக தொடங்கும் இந்த பிரச்னை நாளடைவில் வீட்டின் அழகை மட்டுமல்லாமல், அதன் ஒட்டுமொத்த வலிமையையும் சிதைத்துவிடும்.
எனவே, முன்கூட்டியே அறிந்துகொள்வது வீட்டு உரிமையாளருக்கு அவசியம். வெயில் மற்றும் மழையின் மாறுபட்ட தாக்கத்தால், மொட்டை மாடி சிமென்ட் தளங்களில் கண்ணுக்கு தெரியாத சிறிய விரிசல்கள் ஏற்படுகின்றன.
மழைநீர் வடிய சரியான சரிவு இல்லையெனில் தண்ணீர் தேங்கி மெல்ல மெல்ல சிமென்ட் தளத்திற்குள் இறங்கும். மாடியில் உள்ள மழைநீர் வடிகால் குழாய்களில் இலை மற்றும் குப்பை அடைத்துக்கொள்வதால் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்குகிறது.
ஓடு வேய்ந்த வீடுகளில் ஓடுகள் உடைவதோ அல்லது தன் இடத்தை விட்டு மாறுவதோ கசிவுக்கு முக்கிய வழியாகும். பிளாஸ்டர் சேதமடைதல் மற்றும் அடித்தளத்திலிருந்து ஈரப்பதம் மேலே ஏறுதல் போன்ற காரணங்களால் சுவர் கசிவு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க பிரத்யேக எதிர்ப்பு பெயின்ட், சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களை 'கிராக் பில்லர்' வாயிலாக அடைத்து 'சீல்' மற்றும் வெளிப்புற சுவர்களில் 'வாட்டர் புரூப்பிங்' கோட் அடித்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம். தரை டைல்களுக்கு இடையிலான 'கிரவுட்' தேய்ந்து போவது. ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் சட்டகங்கள், சுவர்களுக்கு இடையே இடைவெளி இருப்பது, மழைநீர் நேரடியாக தாக்குவது போன்ற காரணங்களால் கசிவு ஏற்படுகிறது.
இந்த கசிவுகள் வீட்டின் உள்புற சுவர்களை சேதப்படுத்தி ஈரப்பதத்தை உருவாக்குகின்றன. இதைத் தடுக்க 'பிரேம்' மற்றும் சுவர் இணையும் பகுதிகளில் 'சிலிக்கான் சேலன்ட்' பயன்படுத்தி நன்கு 'சீல்' செய்ய வேண்டும்.
கூரை கசிவை வெறும் அழகியல் பிரச்னையாக மட்டும் பார்க்கக் கூடாது. இதனால் கடுமையான ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
'கான்கிரீட்' கம்பிகள் துருப்பிடித்து வீட்டின் ஆயுளை குறைத்துவிடும். சுவர்களில் உள்ள மின் ஒயரிங் அல்லது சீலிங் பேன் பாயின்ட்களில் தண்ணீர் கசிந்தால் 'ஷார்ட் சர்க்யூட்' ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
தொடர் ஈரப்பதம் காரணமாக சுவர்களில் பூஞ்சைகள் வளரும். இது வீட்டில் உள்ளவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் சுவாசப் பிரச்னைகளை உண்டாக்கும் என, எச்சரிக்கிறார் கோவையை சேர்ந்த சிவில் துறை பேராசிரியர் சாமுவேல் தனராஜ்.
'கான்கிரீட்' கம்பிகள் துருப்பிடித்து வீட்டின் ஆயுளை குறைத்துவிடும். சுவர்களில் உள்ள மின் ஒயரிங் அல்லது சீலிங் பேன் பாயின்ட்களில் தண்ணீர் கசிந்தால் 'ஷார்ட் சர்க்யூட்' ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
மேலும்
-
கிரீன் மாரத்தான் போட்டி 500 பேர் பங்கேற்பு
-
கன்னியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
-
தோட்டக்கலைத் துறை அலுவலர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
-
தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: பல இடங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை
-
கொக்கிலமேடில் 8 குடும்பங்கள் பாதுகாப்பு கோரி போலீசில் மனு
-
வனப்பகுதியில் குப்பை கழிவுகள் விலங்குகளுக்கு நோய் அபாயம்