ஏலக்காய் ரூ.4,149 கோடிக்கு ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு

புதுடில்லி: நாட்டின் ஏலக்காய் ஏற்றுமதி மதிப்பு, 4,149 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த இரண்டாண்டுகளில் மும்மடங்கு உயர்வு என, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தரவுகள்:

கடந்த 2025 - 26ம் நிதியாண்டில் 4,149 கோடி ரூபாய்க்கு ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய 2023 - 24ம் நிதியாண்டின் 1,253 கோடி ரூபாயை விட மும்முடங்கு அதிகம். இதேபோல் 2023 - 24ல், 7,674 டன் ஏற்றுமதியான நிலையில், கடந்த 2025 - 26ல், 16,399 டன் ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்தாண்டில் சர்வதேச சந்தையில் ஏலக்காய்க்கு அதிக தேவை ஏற்பட்டது.

அதேபோல், நம் நாட்டின் ஏலக்காய்க்கு சர்வதேச சந்தையில் அதிக தேவை உள்ளது என்பதையே இது காட்டுகிறது. தரம், மணம் ஆகியவற்றில் நம் நாட்டின் ஏலக்காய்க்கு சர்வதேச வர்த்தகர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஏலக்காய் ஏற்றுமதி (ரூபாய்/கோடியில்) ஆண்டு உற்பத்தி ஏற்றுமதி மதிப்பு 2025-26 24,715 16,399 4,149 2023-24 25,230 7,674 1,253

@block_B@

உற்பத்தியும் விலையும் சாதகம்

கேரளா, தமிழகம், கர்நாடகாவில் ஏலக்காய் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2025 - 26ல், 24,715 டன்னும் முந்தைய 2023 - 24ல், 25,230 டன்னும் உற்பத்தியானது. கடந்தாண்டில் 1 கிலோ ஏலக்காய் விலை 2,470 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், 2023 - 24ல், 1,763 ரூபாய்க்கே விற்பனையானது. கடந்த 2025 - 26ல் உற்பத்தி, விலை இரண்டும் சாதகமாக இருந்தது. நடப்பு சீசனில் போதுமான மழை இல்லாததால், விளைச்சல் குறையும் என நறுமண பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.block_B

Advertisement