குறைகளை தீர்க்க வணிக சங்கங்களை அழைக்க வேண்டும்
மதுரை: உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் உள்ள குறைகளை தீர்க்க வணிக சங்கங்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டுமென தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சுகாதாரத்துறை செயலர் தாரேஸ் அகமதுவை சங்கத்தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம், துணைத்தலைவர், கிஷோர் ஆகியோர் சந்தித்தனர்.
அவர்கள் கூறியதாவது: பூச்சிக்கொல்லியின் தாக்கம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வணிகர்கள், தயாரிப்பாளர்கள் பாதுகாக்கப்படுவதற்கு வேளாண், சுகாதாரத்துறை இணைந்து கமிட்டி அமைக்க மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்த போது சம்மதம் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள தயாரிப்பாளர்கள், வணிகர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தமிழக அரசின் சார்பாக மத்திய உணவுப்பாதுகாப்புத் துறைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். அதற்கு முன்பாக வணிகர்களை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்தோம்.
மேலும் தமிழக பட்ஜெட்டுக்கு முன்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எங்கள் சார்பில் பங்கேற்றோம். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பேக்கிங் அளவை நிர்ணயிக்காமல் முழுமையான ஜி.எஸ்.டி., வரிவிலக்கு அளிக்க வேண்டும். அட்டைப்பெட்டி உற்பத்தியில் உள்ள வரி முரண்களை சீரமைக்க வேண்டும்.
ரயில்வே பார்சல், ஆம்னி பஸ் மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான இ--ரயில் பாஸ், இ-- பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம் என்றனர்.
மேலும்
-
சிறிய வீடு கட்ட பிரீகாஸ்ட் கட்டுமான முறை உகந்ததா?
-
சுவர்களில் ஈரம்...அலர்ஜி ஏற்படுத்தும்! ஆரம்பத்திலேயே தடுப்பது கட்டடத்துக்கும் நலம்
-
நில வழிகாட்டி மதிப்பு குழப்பங்களுக்கு தீர்வு என்ன?
-
நகைகள் ஏற்றுமதி மே மாதம் 26% உயர்வு
-
ஏலக்காய் ரூ.4,149 கோடிக்கு ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு
-
இந்தியாவில் சீன போன்கள் விற்பனை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு