குடியிருப்போர் சங்க ஆலோசனை

திருப்பரங்குன்றம்: தனக்கன்குளம் சமாதான நகர் மகிழம்பூ குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தலைவர் கடற்கரை தலைமை வகித்தார். செயல் தலைவர் சிவநாராயணன், ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சொக்கலிங்கம் வரவேற்றார்.

செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரி அறிமுக உரையாற்றினார். திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதனகலா, நெடுஞ்செழியன், எஸ்.ஐ., மகேஷ்வரன், சமூக பாதுகாப்பு மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற உத்தீஸ், தர்ஷினி, ஸ்ரீமதிக்கு பரிசு வழங்கப்பட்டது. துணைத்தலைவர் புகழேந்தி தீர்மானங்கள் வாசித்தார். அடிப்படை வசதிகள் கேட்டு அதிகாரிகளிடம் மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

Advertisement