பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட ராகுல், பிரியங்கா கைது! டில்லியில் பதற்றம்
புதுடில்லி: 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது, போலீசார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுவீச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் ஆகியோர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டனர். இதனால், தலைநகர் டில்லியில் நேற்றும் பதற்றமான சூழல் உருவானது.
'நீட்' வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்த, லடாக் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமானதால், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மோதல்
இந்தச் சூழலில், நேற்று மு ன்தினம் பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே தலைமையில், அக்கட்சியினர் பார்லி.,யை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுக்க முயன்றதால், இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் போலீசாரை நோக்கி போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால், அங்கு வன்முறை வெடித்தது.
இதையடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போலீசார் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும், பலரை தடுப்புக் காவலில் கைது செய்தனர். இந்த சம்பவத்தால், ஒட்டுமொத்த டில்லியும் ஸ்தம்பித்தது.
இந்த மோதலில் 118 போலீசாரும், போராட்டக்காரர்களில் 60க்கும் மேற்பட்டோரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதுடன், பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக போலீசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதே சமயம், அமைதியாக போராட முயன்ற மாணவர்கள் மீது, போலீசார் தேவையற்ற அடக்குமுறையை கையாண்டதாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கும், கண்ணீர் புகை குண்டு வீசியதற்கும் கண்டனம் தெரிவித்து, டி ல்லியில் நேற்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜாஜி மார்க்கில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், நேற்று காங்கிரசார் ஒன்றுகூடினர்.
அங்கிருந்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., - எம்.பி., பிரியங்கா, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் உள்ளிட்டோர், லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு திடீரென சென்று முற்றுகையிட முயன்றனர்.
தள்ளுமுள்ளு
இந்த போராட்டம் குறித்து முன்கூட்டியே அறியாத டில்லி போலீசார், பின்னர் உஷாரடைந்து கூடுதல் படைகளை குவித்து, தடுப்பு அரண்களையும் அமைத்தனர். முற்றுகையிட முயன்ற தலைவர்களையும் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அந்த இடத்திற்கு வந்த பா.ஜ.,வை சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ராகுலை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். இதில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில், பிரதமர் இல்லம் அமைந்து இருக்கும் பகுதி அருகே தரையில் அமர்ந்து ராகுல் உள்ளிட்டோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது, ராகுல் தரையில் படுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் அவரை வலுக்கட்டாயமாக துாக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், ராகுலுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதே போல் பிரியங்காவையும் தடுப்பு காவலில் கைது செய்து, போலீசார் தங்களது வாகனத்தில் ஏற்றினர். அப்போது, பிரியங்கா போலீஸ் வாகனத்தின் கதவை பிடித்துக் கொண்டு தொங்கியபடி சென்றது டில்லி வீதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில மணி நேரங்களுக்கு பின் ராகுல் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.
வலியுறுத்தல்
முன்னதாக, இந்த போராட்டம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட ராகுல், 'இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழித்ததற்காக பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்' என, வலியுறுத்தினார்.
ராகுல் கைதை கண்டித்து, சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் பேரணி, தமிழக காங்., சார்பில் நேற்று இரவு நடந்தது.
உயர் கல்வி அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில், எம்.எல்.ஏ., தாரகை கத்பட், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உட்பட, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
@block_B@ காங்.,கின் கோரிக்கைகள்
* மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்
* பார்லி.,யில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் தர வேண்டும்
* பார்லி.,யில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும்
* மாணவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்
* மாணவர்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை குறித்து விசாரணை நடத்த வேண்டும்.block_B
@block_G@ காயமடைந்தோருக்கு ஆறுதல் கூறிய நட்டா
டில்லியில் நடந்த போராட்டத்தில், போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த போராட்டக்காரர்களும், மாணவர்களும், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சுகாதார துறை அமைச்சர் நட்டா நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.block_G
@block_Y@ தனியார் மருத்துவமனைக்கு மாற்ற ஐகோர்ட் அனுமதி
டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை, மேல் சிகிச்சைக்காக ஹரியானாவின் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 20 நாளாக இருந்த உண்ணாவிரதத்தால், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், எனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தர அனுமதிக்க கோரி அவரது மனைவி கீதாஞ்சலி மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்தே டில்லி உயர் நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது.block_Y
@block_P@ காங்., திட்டத்தை அறியாத போலீஸ்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நேற்று 84வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க காங்., மூத்த தலைவர்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் டில்லியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். கர்நாடகா, கேரளா முதல்வர்கள், கூட்டணி கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து செல்ல குவிந்தனர்.
இந்தச் சூழலில், அவரது இல்லத்தில் இருந்தே திடீரென பிரதமர் இல்லத்தை முற்றுகையிட காங்., தலைவர்கள் சென்றனர். இதனால், காங்., திட்டத்தை போலீசார் முன்கூட்டியே அறியவில்லை என கூறப்படுகிறது. எனினும் கடைசி நேரத்தில் உஷாராகி, பிரதமர் இல்லத்தின் முன் குவிந்த காங்., தலைவர்களை, தடுப்பு காவலில் கைது செய்து அப்புறப்படுத்தினர்.block_P
Raghul is part time politician.Congress will not come to power under his leadership.
இருக்காரா, மெடல் வாங்க போயிருக்காரா?
மோடிக்கு எதிரா யார் போராடினாலும் சரி. அது கரப்பான் பூச்சிகள், மூட்டைப் பூச்சிகளாக இருந்தாலும் பரவாயில்ல? அண்ணனும், பாசமலர் சிஸ்டரும் அங்கே உடனே நேரில் ஆஜராகி தங்களுக்கான அரசியல் ஆதாயம் ஏதாவது இதில் தேறாதா? என கணக்கு போட வேண்டியது. இதெல்லாம் ஒரு பொழப்பு?
ஐயோ கொல்றாங்க ஐய்யோ கொல்றாங்க என்ற கட்டுமரத்தின் நடிப்பை மிஞ்சும் அளவுக்கு ராவுலின் நடிப்பு உள்ளது. பி ஜே பி யின் ஓட்டு வங்கி உயர இப்படி எல்லாம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கு.
இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள், மாணவர்கள் எவரும் கல்லூரிக்குள் நடக்கும் வகுப்புகளுக்கு செல்லாமலும் தேர்வுகள் எதையுமே எழுதாமலும் பட்டங்களைப் பெறவும், அதே சமயம் ஐந்து இலக்க சம்பளத்துடன் கூடிய நல்ல வேலையைப் பெறவும் வேண்டும் என்று கோரி, அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுமாறு மாணவ சமுதாயத்தை தூண்டி விடுகின்றன. இதெல்லாம் எந்த நோக்கத்திற்காக? இந்த அரசியல் தலைவர்களின் உண்மையான குறிக்கோள் என்ன? நம் நாட்டின் தலைமையை மாற்றுவதா? அவர்களிடம் உள்ள திறமையான தலைவர் யார்? காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களா? அதிலும் முதிர்ச்சியற்ற ராகுல், அவரது சகோதரி பிரியங்கா அல்லது மல்லிகார்ஜுன கார்கே போன்ற மிக மோசமானவராகள் தான் அவர்களது தேர்வுகளா? அவர்கள் நம் நாட்டை மீண்டும் ஐந்து தசாப்தங்கள் பின்னோக்கிய காலத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறார்களா? நமது மக்கள் எதிராக ராசிகளின் புது கடும் கோபத்தில் உள்ளனர் இத்தகைய திசையில் செல்வதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.மேலும்
-
ஈரான் மீது 11வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் மறுப்பு
-
எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்
-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்; 2 ஆண்டுக்கு பிறகு புதிய வரி அறிவித்தார் டிரம்ப்
-
காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்
-
பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
-
எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்