மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தாசில்தார் மோகன் தலைமை வகித்து பேசியதாவது:
நாட்டின், 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் துவங்கவுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுய கணக்கெடுப்பில் தங்கள் விபரங்களை, https://se.census.gov.in இணையத்தில் வரும், 31ம் தேதி வரை மக்கள் பதிவு செய்யலாம். அதில், உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, அதில் கேட்கப்படும், 33 கேள்விகளுக்கு பதிலளித்து பதிவு செய்தால், உங்களுக்கு எஸ்.இ., - ஐ.டி., வழங்கப்படும். வரும் ஆக.,1 முதல், ஆக., 30 வரை உங்கள் வீடுகளுக்கு கணக்கெடுப்புக்கு வரும் அலுவலர்களிடம் அந்த ஐ.டி.,யை குறிப்பிட்டாலே போதும். இல்லாவிட்டால், அலுவலர்கள் கேட்கும் ஆவணங்களை காட்டி, மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்களின் பங்கே மிக அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.
போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட் வழியாக தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில், 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பேண்டு வாத்தியங்கள் வாசித்தபடியும், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியபடியும் கலந்து கொண்டனர்.
மேலும்
-
ஈரான் மீது 11வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் மறுப்பு
-
எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்
-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்; 2 ஆண்டுக்கு பிறகு புதிய வரி அறிவித்தார் டிரம்ப்
-
காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்
-
பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
-
எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்